Anandhibayi Matrum Pira Kathaikal / ஆனந்திபாயி மற்றும் பிற கதைகள்
-
₹90
- SKU: SA0022
- ISBN: 9788126026913
- Author: Parasuram
- Language: Tamil
- Pages: 170
- Availability: In Stock
புகழ்பெற்ற வங்காளி எழுத்தாளர் பரசுராம்
(இயற்பெயர் ராஜசேகர் போஸ்) ஒரு பல்துறை மேதை. 1880ம் ஆண்டில் பிறந்த இவர் வேதுயியலில்
முதுகலைப்பட்டம் பெற்றபின் சட்டம் பயின்று அதிலும் பட்டம் பெற்றார். ஆனால்
வழக்கறிஞர் ஆகாமல் வங்காள கெமிகல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை
பணியாற்றினார்.
சமூகத்துக்கு மிகவும் பயனளிக்கும் பணிகளில்
ஈடுபட்ட பரசுராம் பாமர மக்களும் எளிதில் படிக்க வசதியாக ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் சுருக்கமாக வங்காளியில்
எழுதினார். சாதாரண மக்கள் பயன் படுத்தத்தக்க சலந்துகா என்ற வங்காளி அகாரதிகள்
இயற்றினார்.
பரசுராம் தம் நகைச்சுவைப் படைப்புகளால் அழியாப்
புகழ் பெற்றார். வாசகர்களின் மனத்தில் நிலையாக இடம் பிடித்துவிட்டார். இருபதாம்
நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான பரசுராமின்
நகைச்சுவைப் படைப்புகளில் சீர்திருத்த நோக்க மற்ற அட்டகாசச் சிரிப்பும் உண்டு,
கடுமையான சமூக
விமரிசனமும் உண்டு, ஆழ்ந்த சிந்தனை
வெளிப்பாடும் இருக்கும். இவையாவற்றையும் இந்தத் தொகுப்பில் காணலாம்.




